ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கி வரும் படம் 'குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மும்பை மாடல் அழகி பாலக் லால்வானி கதாநாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக பூனம் பஜ்வா நடித்திக்கிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் பார்த்திபன் 'யோகி' பாபு, ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை. 'S FOCUSS' என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சென்னை சேரிப் பகுதிகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் 'குப்பத்து ராஜா' படத்திற்காக சேரி போன்ற செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் வருகிற மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.