வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட் மலையாளத்தில் இயக்கிவரும் படம் 'கம்மர சம்பவம்'.. திலீப் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில், இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார் சித்தார்த். இசையமைப்பாளர் தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப்படம் மூன்றுவித காலகட்டத்தில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் ஒன்று.. இந்த மூன்று காலகட்டங்களிலும் திலீப்பின் கெட்டப் மூன்றுவிதமாக மாற்றப்பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக திலீப் 9௦ வயது கிழவராக நடிக்கிறார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம்.
இதோ இப்போது திலீப்பின் மூன்று கெட்டப்புகளையும் ஒன்றிணைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளார்கள். வழக்கமான திலீப் பாணி படங்களில் இருந்து இந்தப்படம் நிச்சயம் மாறுபட்டு இருக்கும் என தெரிகிறது.