இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை பாவனா. திருமணத்திற்கு பின்னும் நடிப்பதற்கு காதல் கணவர் பச்சைக்கொடி காட்டவே, சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்தும் வருகிறார் பாவனா. அதில் ஒன்றுதான் கன்னடத்தில் உருவாகி வரும் 'இன்ஸ்பெக்டர் விக்ரம்'.
பிரஜ்வால் தேவராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில், பாவனா போதை மருந்து விற்கும் பெண்ணாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்தப்படப்பிடிப்பில் இன்னும் ஒரு வாரம் கழித்து பாவனா இணைய இருக்கிறாராம்.
இதுதவிர மஞ்சினா ஹனி என்கிற இன்னொரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார் பாவனா.