'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் கஜினிகாந்த் படத்தில் நடித்துள்ள ஆர்யா, கலர்ஸ் தொலைக்காட்சியில் பங்கேற்றபடி தனது வருங்கால மனைவியை தேடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கு, கன்னடத்தில் அவர் நடித்துள்ள, ராஜரதம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆர்யா ஒரு குடை பிடித்தபடி சாந்தமாக நின்று கொண்டிருக்கிறார். இது பல திரையுலகினரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, கன்னட நடிகரான நான் ஈ சுதீப், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள ஆர்யா, தன்னை இம்ப்ரஸ் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அனூப் பண்டரி, அவந்திகா ஷெட்டி ஆகியோருடன் ஆர்யாவும் இந்த படத்தில் விஷ்வா என்ற முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 23-ந்தேதி திரைக்கு வருகிறது.