இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த, 1985ல், பிரபுவும், ரேவதியும் நடித்து, பெரும் வெற்றி பெற்ற படம், கன்னி ராசி. பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கி இருந்தார். தற்போது, இதே பெயரில் மற்றொரு படம் தயாராகிறது.
இதில், விமல் ஹீரோவாகவும், வரலட்சுமி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மன்னர்
வகையறா படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதால், அதனால் ஏற்பட்டுள்ள கிராக்கியை தக்க வைத்துக் கொள்ள, இந்த படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், விமல். யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர் என, காமெடி பட்டாளமும் இந்த படத்துக்காக களம் இறங்கியுள்ளது.
''ஒரு மாதம் இடைவெளி விட்டு நடித்தாலே,ஒரு டஜன் ஹீரோக்கள் புதிதாக வந்து விடுகின்றனர். எனவே, நமக்கான இடத்தை தக்க வைக்க, கடுமையாக போராட வேண்டி உள்ளது,'' என்கிறார், விமல். விமலின்ஆசையை கன்னிராசி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.