ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுட்ட கதை, கள்ளப்படம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி பிரியா. இவர், சினிமா படங்களில் நடித்து பிரபலமானதை விட குறும்படங்களில் நடித்து தான் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த லட்சுமி என்ற குறும்படம் கடும் விவாதத்திற்கு உள்ளானது. அவர் அளித்த மினி பைட் இதோ...
லட்சுமி குறும்படம் அனுபவம் பற்றி சொல்லுங்க?
நிறைய மக்கள் பார்த்த ஒரு குறும்படம் அது. 70 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளார்கள். கணவன் - மனைவி இடையேயான உறவு, நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை கண்முன் காட்டியது. மணிரத்னம், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் பார்த்து பாராட்டினார்கள், பெருமையாக இருந்தது.
ரிச்சி படத்திற்கு பிறகு உங்களை ஆள காணோமே?
வஸந்த் இயக்கத்தில் சிவரஞ்சனியும் சில பெண்களும் என்ற படத்தில் சிவரஞ்சனி என்ற ரோலில் நடித்து வருகிறேன். 3 ஹீரோயின்கள் உள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது.
சினிமா ஆசை?
நல்ல நடிகை என பெயர் எடுப்பதை விட லட்சுமி சிறந்த கலைஞர் என்று சொல்ல வேண்டும்.
சினிமாவில் உங்களின் ரோல் மாடல்?
நந்திதா தாஸ், பார்வதி
படிப்பு?
சென்னையில் எம்.எஸ்.டபிள்யூ., படித்துள்ளேன்.
விளையாட்டு ஆர்வம்?
கிரிக்கெட் பிடிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் பி டீமில் விளையாடி உள்ளேன்.
அடுத்தப்படம்?
பக்ஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளேன். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடக்கின்றன. அந்த பணி முடிந்ததும், விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.