தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடிக்கின்றனர். செல்வராகவன் பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில், சூர்யாவின் கெட்டப் பல யூகங்களை ஏற்படுத்தும் வித்தில் இருந்தது.
சூர்யாவின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. பர்ஸ்ட் லுக் வெளியானதை அடுத்து, டீசர் எப்போது வெளியாகும் என்று சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
இதனிடையே ஜூன் மாதம் என்ஜிகே டீசர் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ஸ்டிரைக் நடந்து வருவதால் படப்பிடிப்பு பாதிக்கும் சூழல் உருவானாலும் முடிந்தளவுக்கு திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட எண்ணியுள்ளனர்.