வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அஜித் நடித்த வேதாளம், விவேகம் என தொடர்ந்து இரண்டு படங்களுக்கு இசையமைத்தார் அனிருத். இதில் வேதாளம் அளவுக்கு கூட விவேகம் பட பாடல்கள் ஹிட்டாகவில்லை. குறிப்பாக விவேகம் படத்தின் போது சரியாக திட்டமிட்டபடி அனிருத் இசையமைத்து கொடுக்கவில்லை என இயக்குநர் சிவா, அப்செட்டில் இருந்தார். அதனால் தான் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தை தேர்வு செய்யாமல் இமானை ஒப்பந்தம் செய்தனர்.
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை வருகிற 23-ஆம் தேதி ஐதராபாத்தில் துவங்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கவுன்சில் உத்தரவிட்டிருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் விசுவாசம் படத்திற்காக இரண்டு பாடல்களை முன்கூட்டியே ரெடி செய்து விட்டார் இசை அமைப்பாளர் டி.இமான்.
இமானின் பாடல்களைக் கேட்ட சிவா, அதை அஜித்துக்கும் போட்டுக்காட்ட, டபுள் ஹேப்பியாகிவிட்டாராம் அஜித். தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள 'விசுவாசம்' படத்தில் அஜித்துடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்!