பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள ஆக்சன் கிங் நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மற்றும் பாகமதி ஹீரோ உன்னி முகுந்தன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'இறா'.. ஸைஜூ என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதில் குற்றவாளியான கோகுல் சுரேஷ் அணிந்துள்ள நீலநிற சட்டை, போலீசார் முன்பு அவர் பேசும்போது பயன்படுத்தப்பட்டுள்ள வசனம் எல்லாமே நடிகை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சமயத்தில் நடந்தது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல 'ஒரு குற்றவாளியின் கதை', 'அவன் வலையில் வீழ்த்தப்பட்டான்' என்கிற இந்த படத்தின் டேக்லைன்களும் இதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. ஆனால் படத்தின் இயக்குனரோ, இவை கதைக்கு தேவையானவை என்பதால் தான் சேர்த்திருக்கிறோமே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்கிறார்.,