இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டான் சாண்டி இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில் ஜீவா, ஷாலினி பான்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கொரில்லா'.
படத்தின் பெயரிலேயே கொரில்லா இருப்பதால் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கொரில்லா குரங்கும் படத்தில் நடிக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். தமிழில் மிருகங்களை வைத்து படங்கள் வருவது வெகுவாகக் குறைந்துவிட்ட இந்த காலத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கொரில்லாவை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார்கள். இந்தியா வந்ததும், சென்னையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கொரில்லாவுடன் படத்தின் நாயகன் ஜீவா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தாய்லாந்து படப்பிடிப்பு பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.