இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த தமன்னா, தற்போது சீனுராமசாமி இயக்கி வரும் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதியுடன் நடிக்கிறார்.
இந்த படத்தில் தனது வேடம் குறித்து தமன்னா கூறுகையில், இந்த கண்ணே கலைமானே படத்தில் ஒரு வங்கி ஊழியராக நடிக்கிறேன். ரொம்ப எமோசனலான வேடம். தர்மதுரை படத்தைப் போலவே இந்த படத்திலும் என்னை அழுத்தமான பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் சீனுராமசாமி.
அதோடு, மதுரை கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. எனக்கான காட்சிகளில் நடித்து முடித்து விட்டு திரும்பும்போது அந்த யூனிட்டை விட்டு பிரியவே மனமில்லை. அந்த அளவுக்கு சீனுராமசாமியின் படத்தில் நடிப்பது ஒரு இனிமையான அனுபவம் என்கிறார் தமன்னா.