இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாக் அஸ்வின் இயக்கி வரும் படம் மகாநதி. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், ஜமுனாவாக சமந்தாவும், ஜெமினிகணேசனாக துல்கர்சல்மானும், என்டிஆராக ஜூனியர் என்டிஆரும், நாகஸ்வரராவாக நாக சைதன்யாவும் நடிக்கிறார்கள்.
மேலும், பானுமதி வேடத்தில் அனுஷ்கா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. கதையின் நாயகியாக நடித்து வரும் அனுஷ்கா சரியான படவாய்ப்பு இல்லாததால் இந்த படத்தை ஒத்துக்கொண்டதாகவும் கூறப் பட்டது.
ஆனால் இப்போது அந்த செய்தியை டைரக்டர் நாக்அஸ்வின் மறுத்துள்ளார். பானுமதி வேடத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு மார்ச் இறுதியில் மகாநதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விஎப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.