Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்?

13 மார், 2018 - 19:13 IST
எழுத்தின் அளவு:
Ajith-in-Boney-Kapoor-film

விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில், விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஆனால் தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்கால் இப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

இதனிடையே, அஜித்தின் அடுத்தப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களின் இயக்குநர் வினோத் இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் இந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், ஸ்ரீதேவி இடையே நல்ல நட்பு இருந்தது. அதனால் தான் ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி கேட்டு கொண்டதால் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் அஜித். அந்த நட்பின் அடையாளமாக போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவியின் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. அஜித், ஷாலினி இருவரும் போனி கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அந்த சந்திப்பின் போதே, அஜித்தின் படம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement
காலாவால் பெரும் லாபம் : ரஜினி குடும்பம் மகிழ்ச்சிகாலாவால் பெரும் லாபம் : ரஜினி ... நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ...


வாசகர் கருத்து (3)

Indian -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2018 - 12:52 Report Abuse
Indian .தல பத்தி பேச உனக்கு தகுதியல்லா.
Rate this:
Kailash - Chennai,இந்தியா
14 மார், 2018 - 10:16 Report Abuse
Kailash அஞ்சலி கூட்டத்தில் அடுத்த தயாரிப்பை பற்றியா பேசுவார்கள் நல்ல கதை சொல்லுகிறீர்கள்... இப்படி மற்றவர்கள் இருந்தாலும் தல இப்படி செய்யமாட்டார்..
Rate this:
cp -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2018 - 08:41 Report Abuse
cp TN producers are not ready to produce his movie.. so going with Bollywood producer
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in