ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியலில் களம் காண உள்ள நடிகர் ரஜினிகாந்த், தற்போது இமயமலை சென்றுள்ளார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர் தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.
அங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி, நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக் கூறினார்.
முன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை. நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.