ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம், தமிழில் துருவா என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. பாலா இயக்க, விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வருகிறது.
ஹீரோயின் இல்லாமல் ஆரம்பமான இப்படத்தில், நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. இதை கவுதமி மறுத்துள்ளார்.
இதுகுறித்து கவுதமி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... என் மகள் சினிமாவில் அறிமுகமாவதாக செய்திகள் பார்த்தேன். சுப்புலட்சுமி தன் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதைக்கு அவரை நடிக்க வைக்க எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.