'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ரஜினியைப் போன்று ஆண்டுக்கணக்கில் அரசியல் பிரவேசத்தை இழுத்தடிக்காமல், மின்னல் வேகத்தில் கட்சியை ஆரம்பித்து மக்களை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன். ராமநாதபுரம், மதுரை, ஈரோடு என்று மக்களை சந்தித்து வரும் கமல், அடுத்தபடியாக தமிழகமெங்கிலும் சென்று மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படி அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால், அவரது இந்தியன்-2 படம் திட்டமிட்டபடி நடக்குமா? என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரஜினியின் 2.0 பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டு வருவதோடு, அப்படத்தின இறுதிகட்ட பணிகள் தாமதமாகிக்கொண்டே வருவதால் இந்தியன்-2 இந்த ஆண்டு இறுதியில் தொடங்குமா அல்லது அடுத்த ஆண்டு தொடங்குமா என்பதே இன்னும் உறுதிப்படுத்தாத செய்தியாக உள்ளது.
அதனால் முன்னதாக, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட்டு விடவேண்டும் என்பதற்கான வேலைகளில் திரைக்குப்பின்னால் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கமல்.