'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், தற்போது அமீர்கான் நடித்து வரும், தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தூம் 3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்தது. அப்போது திடீரென, அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மும்பையில் இருந்து சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சற்று தேறி உள்ளது.
தொடர் படப்பிடிப்புகள், சரியாக தூங்காதது மற்றும் உடல்வலி காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.