Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி நழுவுகிறார் : கமல் விமர்சனம்

12 மார், 2018 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Kamal-slams-rajini

காவிரி விவகாரம் மட்டுமல்ல பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ரஜினி நழுவுகிறார் என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பின்னர், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் குரல் கொடுத்து வருகிறார்.

தேனி மாவட்டம் குரங்கணியில் நடந்த கோர சம்பவத்திற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில், "குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என கூறியிருந்தார்.

தொடர்ந்து இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், யாரும் எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம். அரசு தன் பணிகளை சிறப்பாக செய்தது. எல்லா நேரத்திலும் அரசை விமர்சிப்பது சரியாக இருக்காது. நம் நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அந்தளவுக்கு மீட்பு பணிகள் நடந்தன. பெற்றோர்களுக்கு அனுதாபம்.

50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை, என் நண்பர்கள் வாயிலாக பார்த்திருக்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். எதிர்காலத்தின் ஒரு பகுதியை தீக்கிரையாக்கிவிட்டோம்.

டிரக்கிங் செய்வது தவறல்ல, அது நடக்கத்தான் வேண்டும், ஆனால் பாதுகாப்பாக நடக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வனப்பகுதியில் நாம் அஜாகிரதையாக இருக்கிறோம். புகைப்பிடித்துவிட்டு அது அணைக்காமல் போடுவது, மதுகுடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது போன்ற செயல்களால் விலங்குகள் தான் பாதிக்கப்படுகின்றன. நமக்கும் கொஞ்சம் பொறுப்பு வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கமலிடத்தில் காவிரி விவகாரத்தில் ரஜினி பதில் சொல்ல மறுக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டபோது, காவிரி விவகாரம் மட்டுமல்ல, பல கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்காமல் சென்று விடுகிறார் என்றார்.

Advertisement
அறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்விஅறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான ... 16 தேதி முதல் திட்டமிட்டபடி ஸ்டிரைக் 16 தேதி முதல் திட்டமிட்டபடி ஸ்டிரைக்


வாசகர் கருத்து (51)

விழியப்பன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13 மார், 2018 - 16:52 Report Abuse
விழியப்பன் "குருட்டுத் தனமாய்" - கமலையோ/ரஜினையையோ தூற்றுவதை விட்டுவிட்டு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். இவர்களில், எவரின் தனிப்பட்ட வாழ்க்கையை/விடயங்களை ஆராய்வதை விட்டுவிட்டு அவர்களின் பொதுவாழ்வு எப்படி இருக்கும் என்பதைச் சிந்திப்போம். "தனிப்பட்ட வாழ்க்கையை" அலசினால், இங்கே இவர்கள் மட்டுமல்ல மற்ற அரசியல்வாதிகளின் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் "அந்தரங்கமும்" அசிங்கமாகவே இருக்கும். எனவே, நாம் எல்லோரும் விரும்பும் மாற்றத்திற்கு - இவர்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம். கமலோ/ரஜினியோ - அது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு ஆனால் "அடுத்த தலைவரை" தூற்றும் அநாகரீக அரசியலில் இருந்து இவர்களையாவது விட்டு வைப்போம். இந்த செய்தி சார்ந்த பேட்டியில், கமல் சொல்லி இருப்பது கீழ்வருவதே: "அவர் பதில் சொல்லாததை வைத்து, அவரை எடைபோட்டு ஏதும் சொல்ல முடியாது" என்பதே கமல் சொல்ல வந்த விடயம். எனவே, பல சதிகளைப் போல் "நாமும் - கமல்/ரஜினி என்ற இருவரிடையே அரசியலைச் செய்து" அவர்களை அழிக்க முனையவேண்டாம். இருவரின் நோக்கமும் - மக்களுக்கானதே எனவே, அவரவரின் தலைவரைத் தொடந்து (அதே நேரம் பரஸ்பரம் அடுத்தவரை மதித்து) நம் அரசியலை முன்னெடுத்துச் செல்வோம்.
Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
13 மார், 2018 - 14:51 Report Abuse
சந்தோசு கோபு தலீவர் ஆன்மீகம் சம்பந்தமா பயணம் மேற்கொண்டு இருக்கிறாரு.. இப்போ போய் சம்பந்தா சம்பந்தம் இல்லாம எதுக்குய்யா அரசியல் கேள்வியெல்லாம் அவருகிட்ட கேக்குறீங்க? எதுக்குய்யா மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க? அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் என்னய்யா சம்பந்தம்..? ஆன்மீகம் எவ்ளோ புனிதமான விஷயம் அதுல போய் கருமம் அரசியலை கலக்குறீங்கோ?
Rate this:
Periyasamy - Chennai,இந்தியா
13 மார், 2018 - 14:45 Report Abuse
Periyasamy இவர் உண்மை தமிழன். தமிழன் மேல் அக்கறை உள்ள தமிழன் அதனால்தான் இவர் யாருக்கும் பயப்படாமல் மக்களின் மனதில் உள்ளதை எடுத்து உரைக்கிறார். இவர்தான் நமக்கு வேண்டும்
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
13 மார், 2018 - 13:50 Report Abuse
s.rajagopalan கனவுலகத்தில் இவர் மிதக்கிறார் காவிரி விஷயத்தில் இவர் என்ன சொல்லப் போகிறார் என்று யாராவது காத்துக்கொண்டிருக்கிறாரார்களா ? அல்லது இவர் சொன்னதும். ஆஹா. அப்படிடீங்களா என்று செயல்படப்போகிறார்களா ? ரஜினிக்கு இது புரிந்திருக்கிறது. இவருக்கு....'போதவில்லை' என்றுதான் சொல்லவேண்டும். பம்மல் கே சம்பந்தம் படத்தில் இவர் அடிக்கும் ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. " போ......டா...., பழமொழி சொன்னா ரசிக்கணும்...கேள்வி எல்லாம் கேட்க கூடாது..." இவரது பேச்சுக்களும் அந்த ரகம்தான்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
20 மார், 2018 - 10:06Report Abuse
AarkayAs if the CMs thus far were Tamils Let a good and honest person lead Irrespective of e, colour, creed, religion or region.... We do not mind wherever he's from and we only expect, he takes the state forward and towards prosperity....
Rate this:
Kumar - chennai,இந்தியா
13 மார், 2018 - 13:21 Report Abuse
Kumar ரஜினி பற்றி பேச இவனுக்கு எந்த தகுதியும் இல்லை. ரஜினிக்கு தான் பாப்புலாரிட்டி அதிகம்ன்னு இவனுக்கே தெரியும். பொறாமை தான் இப்படி பேசவைக்கிறது.
Rate this:
13 மார், 2018 - 16:43Report Abuse
குண்டிநோண்டிபகல் கனவு haha.... ஒரு போதும் கன்னடன் தமிழ் நாட்டை ஆள முடியாது.....
Rate this:
kumar - ,
13 மார், 2018 - 17:11Report Abuse
kumarஇவர் ஒரு சிவப்பு சீமான் ஆக மாறி வருகிறார். இருவருக்கும் ரஜினி பற்றி பேசாமல் இருக்க முடியாது. மனதில் அவ்வளவு பொறாமை....
Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal
  Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
  Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in