ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மன்மதன் படத்தில் காமெடியனாக அறிமுகமான சந்தானத்துக்கு 'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தார் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் இயக்கிய 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என எல்லாப் படங்களிலும் சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
எம். ராஜேஷ் கடைசியாக இயக்கிய படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதால், இந்தப்படத்தில் மட்டும் நடிக்கவில்லை.
தற்போது சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் எம்.ராஜேஷ்.
இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டது அந்த நிறுவனம். எனவே, இந்தப் படத்தை பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கின்றனர்.