Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்?

12 மார், 2018 - 17:46 IST
எழுத்தின் அளவு:
TN-Theatres-to-be-closed-from-Friday?

தமிழ் சினிமா ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. கியூப், யு.எப்.ஓ. போன்ற டிஜிட்டல் சினிமா சர்வீஸ் வழங்கி வரும் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து, கடந்த 1-ம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

தயாரிப்பாளர் சங்கம் படங்களின் படப்பிடிப்பையும் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்து இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஸ்தம்பித்து உள்ளது.

இதற்கிடையே தியேட்டர் உரிமையாளர்களும், சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். அந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் வரும் 16-ம் தேதி முதல் தியேட்டர்களை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சென்னையில் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. ஏற்கனவே வெளியான கலகலப்பு 2, நாச்சியார் போன்ற தமிழ் படங்களுடன், பிளாக் பேன்தர், டாம் ரைடர், ஹேட் ஸ்டோரி 4 போன்ற ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள் தான் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் இதே நிலை தான்.

உண்மையில் திரைத்துறையில் இவ்வளவு பெரிய பிரச்னை ஏற்பட என்ன காரணம் என்று பார்த்தால் ஒட்டுமொத்த திரைத்துறையும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை தான் கைகாட்டுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டண கொள்ளையால் பல கோடி லாபம் பார்த்துள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் பெரும் தொகை டிஜிட்டல் கட்டணத்திற்கு செலவிடப்படுவதாகவும், அந்தக்கட்டணத்தில் ஒரு படத்தையே தயாரிக்கலாம் என தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தியேட்டர்களில் திரையிடப்படும் விளம்பரக் கட்டணத்தைக் கூட டிஜிட்டல் நிறுவனங்கள் தான் எடுத்துக் கொள்கின்றன என்று கூறப்படுகிறது.

சினிமா துறை முடங்கியதால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகையால் இதை அரசும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்த பிரச்னையில் அரசு தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படாது என்றே தெரிகிறது. இதன் காரணமாக வருகிற 16ம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் நிச்சயம் மூடப்படும் சூழல் உருவாகி உள்ளது.

அதேசமயம், படங்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்ட படங்களை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெரிய படத்தை எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யுங்கள், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய உடன் நடவடிக்கை எடுங்கள் என விசிறி பட இயக்குநர், ஓவியாவை விட்டா யாரு பட தயாரிப்பாளர் மதுரை செல்வம் போன்ற சின்ன பட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே இன்று மாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம் நடக்கிறது. இதில் இந்த பிரச்னைகளை எல்லாவற்றையும் பேச இருக்கிறார்கள். டிஜிட்டல் பிரச்னையை சட்ட ரீதியாக எப்படி அணுகுவது, அரசுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது, சிறிய படங்களை வெளியிட எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல விஷயங்களை ஆலோசிக்க உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ?நோட்டாவுக்கு நோ சொன்னதா ... அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

nanda kuma - Chennai,இந்தியா
13 மார், 2018 - 08:43 Report Abuse
nanda kuma நிரந்தரமாக மூடி விடவும்.
Rate this:
12 மார், 2018 - 19:30 Report Abuse
vijay,covai close all theatres till school &college exam completes
Rate this:
12 மார், 2018 - 19:28 Report Abuse
Christopher ரொம்ப நல்லது,
Rate this:
Soundar - Chennai,இந்தியா
12 மார், 2018 - 19:17 Report Abuse
Soundar Excellent, let us pray that all cinema theatres remain closed for ever. Our younger generation will not be spoiled & they will find ways to use their time more usefully, our population will become more productive, associated people can not make easy money & sp lavishly there by sky rocketing of prices, black money & black to white conversion will get reduced considerably etc etc .
Rate this:
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
12 மார், 2018 - 18:40 Report Abuse
Ramasamy People of Tamilnadu very happy. They are concentrating on other works. Their money saved. Continue the strike for few months.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in