இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் டீசர் சாதனையில் முதன் முதலில் சாதனை படைத்தது ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' டீசர். அதற்குப் பிறகுதான் விஜய், அஜித் படங்கள் சாதனை புரிய ஆரம்பித்தன. ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'காலா, 2.0' ஆகிய டீசர்கள் வெளிவந்தால் அவை மீண்டும் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விஜய் நடித்த 'மெர்சல்' டீசர் சாதனையை 'காலா' டீசரால் முறியடிக்க முடியவில்லை.
இருந்தாலும் 'காலா' டீசர் தற்போது 2 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது. அதோடு 'கபாலி' டீசர் லைக்குகளையும் 'காலா' டீசர் முறியடித்துள்ளது. 'கபாலி' டீசருக்கு இதுவரை 4 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. 'காலா' டீசர் அந்த எண்ணிக்கையைக் கடந்து 4 லட்சத்து 74 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளன. இருந்தாலும் தற்போதுள்ள டீசர்களின் லைக்குகள் எண்ணிக்கையில் 'காலா' டீசர் இன்னும் 'விவேகம், தானா சேர்ந்த கூட்டம், மெர்சல்' ஆகிய டீசர்களுக்குப் பின்னால்தான் உள்ளது.
'விவேகம், தானா சேர்ந்த கூட்டம்' டீசர்களின் லைக்குகளை 'காலா' டிசர் முறியடிக்க வாய்ப்புண்டு. ஆனால், 'மெர்சல்' சாதனையான 10 லட்சம் லைக்குகளை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.