ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இந்த படம் அரசு மருத்துவமனைகளின் அவலம் மற்றும் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படமும் கத்தி படத்தைப்போன்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. தமிழக விவசாயிகள் எந்தெந்த வகையில் நசுக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகள் எந்தெந்த வகையில் பறிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல விசயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம். இதுதொடர்பாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களும் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.