‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2014-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'குயின்'. அந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ரீமேக் செய்து எடுத்து வருகிறார்கள். தமிழ், கன்னடப் படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்க, தெலுங்கு படத்தை நீலகண்டா இயக்க இப்படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
தமிழில் 'பாரீஸ் பாரீஸ்', தெலுங்கில் 'குயின்', கன்னடத்தில் 'பட்டர்பிளை', மலையாளத்தில் 'ஜம் ஜம்' என பெயரிடப்பட்டது. பாரீசில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் இந்தியாவிற்குத் திரும்பினார்கள். வந்ததுமே தெலுங்கு படத்தின் இயக்குனர் நீலகண்டா படத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். அவருக்கும், தமன்னாவுக்கும் இடையே எழுந்த மோதல்தான் அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால், தமன்னா தயாரிப்பாளர்தான் அவரை நீக்கினார் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது பிரச்சினைகள் முடிவடைந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார்கள். தெலுங்கு ரீமேக்கையும் சேர்த்து ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், கன்னட ரீமேக்கையும் ஏற்கெனவே அவர்தான் இயக்கி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாக உள்ளது.