மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன், இயக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.
கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார். முந்தைய படத்தை விட இந்தப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாம்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், RJ விக்னேஷ், அம்ருதா, ரேணுகா ஆகியோருடன் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். கார்த்தி நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பது இதுவே முதல் முறை.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் 15 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை, இமயமலையிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்தப்படத்தை 'ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துடன் இணைந்து 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' லக்ஷமன் குமார் தயாரிக்கிறார்.
சூர்யாவை வைத்து 'சிங்கம்-2' படத்தை தயாரித்த இவர் இப்போது த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'மோகினி' படத்தை தயாரித்து வருகிறார்.