ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் அவருக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டார். தற்போது அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அவர்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாள மயம்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தாய்மாமனான ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அவருடைய இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் முதல் படம் இது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் விஜய் ரசிகர் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பாடல் காட்சி படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பிரபல தியேட்டர் ஒன்றில் 'மெர்சல்' படத்தின் வெளியீட்டிற்காக பீட்டராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் வைத்துள்ள பல கட்அவுட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் முன்பாக தியேட்டர் வாசலில் ஜி.வி.பிரகாஷ் ஆடிப்பாடும் பாடல் காட்சி படமாகியது.
நிஜத்திலும் விஜய்யின் தீவிர ரசிகர் ஜி.வி.பிரகாஷ். இதற்காக அவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்திருக்கிறது.