ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹரிஸ் கல்யாண், ரெய்ஷா வில்சன் நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல். எலன் இயக்கி வரும் இந்த படத்தை தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு அவரே இசையமைப்பாளரும் கூட.
இந்த படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஜாப்ரூன் நிஷார் காஸ்டியூம் டிசைனராக அறிமுகமாகிறார். சிறுவயதில் இருந்தே டிசைனிங்கில் ஆர்வம் கொண்டவரான ஜாப்ரூன், தனது குடும்பத்தாருக்கு அவ்வப்போது விதவிதமான டிசைனிங் செய்து கொடுத்து அசத்துவாராம். அவரது இந்த திறமையைப் பார்த்த யுவன் சங்கர் ராஜா, தான் தயாரிக்கும் படத்திற்கு அவரையே காஸ்டியூம் டிசைனராக்கி விட்டார்.
அந்த வகையில், இந்த பியார் பிரேமா காதல் படத்தின் நாயகியான ரெய்ஷா வில்சன் அணிந்து நடித்துள்ள உடைகளுக்கு ஜாப்ரூன் நிஷார் தான் காஸ்டியூம் டிசைனராம்.