ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் 'கண்ணே கலைமானே'. இந்த படத்தை உதயநிதியே தயாரிக்கிறார். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் இந்தப்படம் தான். இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். கண்ணே கலைமானே படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
'கண்ணே கலைமானே' படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்.
ஒருவர்... 'மேயாத மான்' படத்தில் நடித்த புகழ் பிரியா பவானி சங்கர். இன்னொருவர்... இந்துஜா. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை வருகிற தமிழ் புத்தாண்டன்று நடக்கவிருக்கிறது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.