ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் - சிவா கூட்டணி 4வது முறையாக இணையும் படம் விசுவாசம். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி தீவிரமாக நடப்பதால் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. இம்மாதம் இறுதியில் ஆரம்பமாகும் என தெரிகிறது.
இதனிடையே படத்தில் பணியாற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகின்றன. அந்தவகையில் இப்படத்தில் காமெடி நடிகராக ரோபோ சங்கர் இணைந்துள்ளார். முதன்முறையாக இவர், அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இதை மகிழ்ச்சியுடன் தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.
விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.