ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகும் படம் 'தடக்'. மராத்தியில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற 'சாய்ராட்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. வரும் ஜுலை மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தான் ஸ்ரீதேவி, துபாய்க்குச் சென்ற போது கூட ஜான்வி உடன் செல்லவில்லை.
ஸ்ரீதேவி மறைந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்தனர். இதனிடையே தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போகக் கூடாது என ஜான்வி நேற்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த படப்பிடிப்பு அங்கு தொடர்ந்து சில நாட்கள் நடக்க உள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோல்கட்டாவில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பில் ஜான்வியை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி படக்குழுவினரிடம் படத்தின் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் ஆரம்பமான போது ஸ்ரீதேவி, போனி கபூர் அனைவரும் சென்றிருந்தனர். தன் மகளின் முதல் படத்தைப் பார்க்காமலேயே ஸ்ரீதேவி மறைந்துவிட்டது படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனிடையே, நேற்று ஸ்ரீதேவியின் அஸ்தியை போனிகபூர் கங்கையில் கரைத்துள்ளார். அவருடன் அனில்கபூர், மனிஷ் மல்கோத்ரா, அமர் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.