Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 மாதத்திற்குள் தமிழ் கற்று டப்பிங் பேசுவேன் : விஜய் தேவரகொண்டா

09 மார், 2018 - 12:44 IST
எழுத்தின் அளவு:
I-surely-will-speak-Tamil-within-3-months-says-Vijay-Deverakonda

தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த பெல்லி சூப்புலு, அர்ஜூன் ரெட்டி இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிலையில் தற்போது அவர் தமிழ், தெலுங்கில் தயாராகும் நோட்டா என்ற படத்தின் மூலம் தமிழுக்கும் வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார், அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார், மெஹ்ரின் ஹீரோயின். நேற்று இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. திருக்குறளுடன் தனது பேச்சை துவக்கிய விஜய், 3 மாதத்தில் தமிழ் கற்று இந்தப் படத்தில் டப்பிங் பேசுவேன் என்று கூறி அனைவரையும் அசர வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

எண்ணித் துணிக கர்மம், துணிந்தபின்
எண்ணுவதென்பது இழுக்கு.

2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சொன்னது இது. ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு நிறைய யோசிக்க வேண்டும். காரியத்தில் இறங்கி விட்டால் அதை ஜெயிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்படித்தான் நான் தமிழில் நடிக்க நிறைய யோசித்தேன். காரணம் தெரியாத மொழியில் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற சந்தேகம். ஆனால் நோட்டா கதையை கேட்டவுடன் தமிழில் நடிப்பது என்று முடிவு செய்து விட்டேன்.

பெல்லி சூப்புலு படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்க முடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். படப்பிடிப்பு நடக்கும் 3 மாதத்திற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்' என்றார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா , இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், இயக்குநர்கள் பா. ரஞ்சித், ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
திரைப்பட விழாக்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடைதிரைப்பட விழாக்களுக்கு ... கவுதமி தயாரித்து நடித்த இசை ஆல்பம் கவுதமி தயாரித்து நடித்த இசை ஆல்பம்


வாசகர் கருத்து (1)

09 மார், 2018 - 19:03 Report Abuse
Chiranjeevi We have enough actors in Tamil Nadu! please take care of your career in Telugu industry!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in