'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இதில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள்.
அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் வாரிசு, சாந்தா ரவி கே.சந்திரன், ஒளிப்பதிவு செய்ய, விக்ரம் வேதா புகழ் சிஎஸ்.சாம் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் இப்படத்தின் பூஜை இருதினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் நடந்தது. தலைப்பே இல்லாமல் ஆரம்பமான இப்படத்திற்கு, தற்போது நோட்டா என பெயர் வைத்துள்ளனர். கூடவே பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு நோட்டா என பெயர் வைத்திருப்பதால், இது நிச்சயம் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் தான் உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் படத்தின் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா, நடுவிரலை காட்டியிருப்பது சற்று சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.