தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை அமலாபால், விஜய்யை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். தற்போது அவர் நடித்து, முடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியாக உள்ளது. மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தமிழில் ஓரிரு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு அமலாபாலின் புதிய படம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் நடிக்கும் படத்திற்கு "அதோ அந்த பறவை போல" என பெயர் வைத்துள்ளனர். எம்ஜிஆர்., நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற அதோ அந்த பறவை போல பாடலின் முதல் வரியை தலைப்பாக்கி உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்குகிறார்.
"அதோ அந்த பறவை போல" படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகை காஜல் அகர்வால், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதோடு, அந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.