ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கனடாவைச் சேர்ந்த நடிகை சன்னிலியோன், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழுக்கு வந்த அவர், தற்போது வடிவுடையான் இயக்கி வரும் வீரமாதேவி, சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு கரேன்ஜிட் டு சன்னி என்ற பெயரில் ஆவணப்படமாக தயாராகி வருகிறது. ஜீ டிவி குழுமம் இந்தபடத்தை தயாரிக்கிறது.
சன்னி லியோனின் நிஜ பெயர் கரேன்ஜிட் கவுர் வோஹ்ரா. அவர் ஏன் சன்னி லியோன் ஆனார். அதன்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதற்கான அனைத்து கேள்விகளுக்கும் இந்த படத்தில் அவர் பதிலளிக்கிறாராம்.