ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஹீரோயின்களாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கருணாஸ், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடெக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து, போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூன் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் மகளிர் தினமான இன்று (மார்ச் 08) இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். தற்போது டுவிட்டரில் இது டிரெண்டாகி உள்ளது.