'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' சுமாரான வெற்றியைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களில் 'சொடக்கு மேல..' பாடல் மட்டும் வெளியீட்டிற்கு முன்பாகவே சூப்பர் ஹிட் ஆனது.
இப்பாடலின் பாடல் வரிகள் வீடியோ கடந்த வருடம் அக்டோபர் மாதம் யு டியூபில் வெளியானது. சுமார் நான்கு மாதங்களில் அந்தப் பாடல் 4 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், அந்தப் பாடலின் வீடியோ, யு டியூபில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்தப் பாடலும் 2 கோடி பார்வைகளைத் தொட உள்ளது.
அனிருத் இசையமைப்பில் ஏற்கெனவே வெளிவந்த பாடல்களான 'மாரி' படத்தில் இடம் பெற்ற 'டானு டானு...' பாடல் வீடியோ 4 கோடியே 90 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்போது 'சொடக்கு மேல...' பாடலும் 4 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
மேலும், 'வேதாளம், கத்தி' ஆகிய படங்களின் சில பாடல்கள் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. யு டியூபைப் பொறுத்தவரையில் அனிருத் இசையமைத்துள்ள பல பாடல்கள் பல கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன.
இன்னும் 'கொல வெறி' பாடலின் பார்வை எண்ணிக்கை 14 கோடிகளைத் தாண்டி தனி சாதனையுடன் இருக்கிறது.