தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமிதாப் பச்சனுக்கு இப்போது 75 வயதாகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்கிறார் மனுஷன். வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடிக்கிறார். ஒரு காலத்தில் ஆக்ஷ்ன் ஹீரோவாக புகழின் உச்சியில் இருந்தவர். இப்போதும் அப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் தன் வயதுக்கேற்ற வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து இப்போதும் அதே உச்சியில் இருக்கிறார்.
தற்போது தயாராகிக் கொண்டிக்கும் 102 நாட் அவுட் என்ற படத்தில் 102 வயது முதியவராக நடிக்கிறார். 80 வயதுக்குள் எல்லாம் முடிந்தது என்கிற காலகட்டத்தில் ஒரு 102 வயது முதியவரின் ஜாலியான வாழ்க்கைதான் படம். அமிதாப்பின் மகனாக 70 வயதை கடந்த ரோலில் ரிஷி கபூர் நடிக்கிறார். வயது தளர்ந்த நிலையில் அப்பா - மகனுக்கு இடையேயான ஒரு பாசப்போராட்டத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்கள்.
இதனை, ஓ மை காட், ஆல் இஸ் வெல் படங்களை இயக்கிய உமேஷ் சுக்லா இயக்குகிறார். அமிதாப்பச்சனுடன் ரிஷிகபூர், ஜிமித் திரிவேதி, பர்வேஷ் ராவல், முகேஷ் ஹரிவாலா நடிக்கிறார்கள். சலிம் சுலைமான், டேனியல் பி.ஜார்ஜ் இசை அமைக்கிறார்கள். லக்ஷ்மண் உத்தேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. மே மாதம் 4ந் தேதி படம் வெளிவருகிறது.