'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
நாச்சியார் படத்திற்கு பிறகு ஹிந்தியில் வித்யாபாலன் நடித்து வெளியான துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் ஜோதிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. ராதாமோகன் இயக்குகிறார். மொழி படத்திற்கு பிறகு ஜோதிகா - ராதா மோகன் கூட்டணி இணைந்துள்ளது.
இந்நிலையில், ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படம், மாயா வர்ணங்கள் என்ற பெயரில் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் கேரளாவில் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு உள்ளாகவே இப்படம் இரு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள டிவியில் ஒளிப்பரப்பாகிவிட்டது.