ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.O படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானது அப்படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதையடுத்து, இன்னும் பணிகள் முழுமை பெறாத டீசர் வெளியானது 2.ஓ படத்தின் தரத்தை குறைத்து விட்டது போல் உள்ளது என்று ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினி கருத்து கூறியிருந்தார். அதோடு இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து இன்னொரு புதிய டீசரை தயார் செய்யும் வேலைகளில் டைரக்டர் ஷங்கர் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், செளந்தர்யா ரஜினி கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2.O டீசர் சம்பந்தமாக லைகா நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.