ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிசுகிசுக்களை யாரும் வேண்டுமென்றே உருவாக்குவதில்லை, சம்பந்தப்பட்டவர்களே வேண்டுமென்று உருவாக்குவார்கள். அவர்கள் வெளியில் சொல்லாமல் அவர்களின் தனிப்பட்ட விஷயம் எப்படி வெளியில் வரும். மற்றவர்களின் பார்வைக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவர்களின் தனிப்பட்ட விஷயங்களைக் கூட சிலர் மற்றவர்களிடம் சொல்லி உருவாக்குவார்கள்.
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி அவர்கள் இருவருமே இதுவரை மறுத்து எதையும் சொன்னதில்லை. பல மேடை நிகழ்வுகளில் அது பற்றி பேசினால் கூட வெட்கப்பட்டு சிரித்துக் கொள்வார்கள்.
விக்னேஷ் சிவன், 'தானா சேர்ந்த கூட்டம்' பட வேலைகளில் இருந்ததால் அவருடைய தனிமையில் நேரம் செலவிட முடியாமல் தவித்துள்ளார் நயன்தாரா. படம் வெளியாகி 50 நாளைத் தொடுவதற்கு முன்பாகவே இருவரும் அமெரிக்க சுற்றுலா சென்றுள்ளார்கள். அந்தப் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இன்றைக்கு முழுவதும் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய பேச்சாகத்தான் இருக்கப் போகிறது.