'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: அனிதா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் நீட்தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடக்கிறார்.
கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை தமிழகம் முழவதும் பெரிதும் பேசப்பட்டது. அனிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளம்பி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடந்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஜூலி, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அனிதா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் நடிக்கபோவதாக அனிதாவின் பிறந்த நாளான நேற்று சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வெளியானது. அதை ஜுலியும் ஒரு பேட்டியின் மூலம் உறதி செய்தார்.
ஏற்கனவே உத்தமி என்ற தலைப்பில் ஜூலி படம் நடிக்கபோவதாக அறிவித்திருந்த நிலையில் அவரை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்தனர். இந்நிலையில் அனிதா எம்.பி.பி.எஸ் பட அறிவிப்பு நெட்டிசன்களை கோபத்தில ஆழ்த்தியுள்ளது. இது குறித்து நேற்றே, பல மீம்களும், நக்கல் ஸ்டேட்டஸ்களும் வரத்துவங்கியுள்ளன.