ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பாலாவின், தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு வரலட்சுமியின் பர்பாமென்ஸ் மீது டைரக்டர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. தற்போது சண்டக்கோழி-2, மாரி-2, கன்னி ராசி, பாம்பன், நீயா 2 என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இதை இப்படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில், வரலட்சுமியின் வேடம் என்னவென்று இன்னும் அப்படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால், அவர் நெகட்டிவ் கலந்த ஒரு வித்தியாசமான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.