'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
துப்பறிவாளன் படத்தையடுத்து மித்ரன் இயக்கத்தில், 'இரும்புத்திரை'படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில் விஷால் உடன், சமந்தா, அர்ஜுன் இணைந்து நடித்துள்ளனர்.
இரும்புத்திரை படத்தை மார்ச் 29 அன்று வெளியிட முடிவு செய்துள்ளார் விஷால். எனவே படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் 'இரும்புத்திரை' படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை ஷிபு தமீன் வாங்கியுள்ளார்.
விஜய் நடித்த 'புலி' படத்தையும், விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தையும் தயாரித்தவர் இவர். தற்போது ஹரி, விக்ரம் கூட்டணியில் 'சாமி-2' படத்தை தயாரித்து வருகிறார் ஷிபு தமீன். விஷாலின் 'இரும்புத்திரை' படத்தை கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதாக விஷாலிடம் உறுதியளித்துள்ளாராம்!
'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு படத்தின் புரமோஷனுக்காக கேரளா முழுக்க டூர் அடிக்க திட்டமிட்டுள்ளாராம் விஷால்.