தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூறாவளியாக சுழன்று நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் மோகன்லால், மங்களூரில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பில் கடந்த பத்து நாட்களாக கலந்து கொண்டு நடித்து வந்தார்.
இதை தொடர்ந்து நேற்று முதல் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி, இதோ இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இளம் வயது தோற்றத்தில் மோகன்லால் தென்படுகிறார் அல்லவா..? அது இந்த ஓடியன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிப்பதற்காகத்தான். மோகன்லால் மட்டுமல்ல, மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இந்த படத்தில் இளம் வயது தோற்றத்துடன் நடிக்க இருக்கிறார்கள்.