'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் செல்வபாரதி நீண்ட இடைவெளிக்கு பிறகு கதை வசனம் எழுதி உள்ள படம் சினிமா நடிகனும் அரசியல்வாதியும். இதனை புதுமுகம் ஷிவ்ராஜ் இயக்குகிறார். சுந்தரி பிலிம்ஸ் சார்பில் எம்.ஞானசுந்தரி தயாரிக்கிறார். ஹீரோவாக சத்யராஜ் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சினிமாவில் பெரிய ஹீரோவாக புகழ்பெற்ற ஒருவர் அரசியலில் குதித்து முதல்வராக நினைக்கிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை காமெடியாக சொல்கிற படமாம்.
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.