தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினியின் 2.ஓ பட டீசர், அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இன்று சமூக வலைதளங்களில் லீக் ஆனது. ரஜினி நடித்துள்ள காலா பட டீசரை தொடர்ந்து, 2.ஓ படத்தின் டீசரும் லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2.ஓ பட டீசர் லீக்கானதற்கு தயாரிப்பாளரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே ஆன்லைனில் படக்காட்சிகள் வெளியிடப்படுவதை ஏற்றுக் கொள்ளவோ, ஊக்குவிக்கவோ கூடாது.
கடின உழைப்பு, முயற்சிகள், தயாரிப்பாளர்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு, சில நொடி ஆர்வத்திற்காக படக்காட்சிகளை ஆன்லைனில் வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leaking content online before the official release should not be TOLERATED or ENCOURAGED ! This is a heartless act ignoring hard work, efforts and sentiments of the makers for few seconds of excitement !!! #BeAshamed #StopPiracy #StopMisusingDigitalMedium
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 4, 2018