ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த நாச்சியார் படம் மீண்டும் அவரது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாச்சியாரைத் தொடர்ந்து இந்தியில் வித்யாபாலன் நடித்த துமாரி சூலு என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் ஜோதிகா. ஏற்கனவே ஜோதிகா நடித்த மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. அதனால் சில தெலுங்கு நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் இடம்பெறுகிறார்கள். அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு இந்த படத்தில் எப்.எம் வானொலியின் முக்கிய அதிகாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தியில் இந்த வேடத்தில் நேஹா தூபியா என்ற நடிகை நடித்திருந்தார்.
மேலும், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இந்த லட்சுமி மஞ்சு, தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் செலினா என்ற வேடத்தில் நடித்தவர்.