டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ஒரு வருடமாக மம்முட்டி நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதில் மாஸ்டர்பீஸ் மட்டும் சூப்பர்ஹிட், நல்ல வசூல் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபீசில் கேட்டால் அப்படியா என உதட்டை பிதுக்குகிறார்களாம். இதில் ஒரு சில படங்கள் இன்னும் சேனல் ரைட்ஸ் கூட விலைபோகாமல் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் மம்முட்டி நடித்து தற்போது போஸ்ட் புரொடக்சனில் இருக்கும் 'அங்கிள்' மற்றும் 'ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்' ஆகிய இரண்டு படங்களின் சேனல் உரிமையை சூர்யா டிவி நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.
இதில் அங்கிள் 'ஷட்டர்' இயக்குனரின் கதையில் உருவாகியிருக்கும் கதையம்சம் உள்ள படம் என்பதும், 'ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்' படம் அதிரடி போலீஸ் அதிகாரியின் கதை என்பதாலும் ரிலீசுக்கு முன்பே விலைபோனதாக சொல்லப்படுகிறது.