ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'நாச்சியார்' படத்திற்குப் பிறகு பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெளிவந்து பெரும் சாதனை படைத்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. பாலா இதுவரை ரீமேக் படங்களை இயக்கியதில்லை. முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்குகிறார்.
பாலா இயக்கிய முதல் படமான 'சேது' படத்தின் நாயகனாக மிகவும் பொறுமையாகக் காத்திருந்து நடித்தார் விக்ரம். அந்தப் படம் இருவருக்குமே தமிழ்த் திரையுலகத்தில் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. தனக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாலா இயக்கத்தில்தான் தன் மகன் அறிமுகமாக வேண்டும் என விக்ரம் பிடிவாதமாக இருந்தார். அதனால், அவருக்காக ரீமேக் படத்தை இயக்க பாலா சம்மதித்திருக்கிறார். இருந்தாலும் தமிழுக்கேற்றபடி பாலா சில காட்சிகளை மாற்றியுள்ளார் என்றும் தகவல்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார், நாயகி யார் என எதுவும் அறிவிக்காமலேயே படக்குழுவினர் தற்போது நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளனர். விரைவில் படம் பற்றிய மற்ற விவரங்கள் அறிவிக்கப்படலாம்.