பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எந்த ஒரு அரசியல்கட்சியாக இருந்தாலும் அதற்கு பெண்கள் ஆதரவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். அதனால் கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிக அளவில் பெண்களை திரட்டி வருகிறார். பெண்கள் அணி ஒருங்கிணைப்பாளர்களாக நடிகை ஸ்ரீபிரியாவும், தயாரிப்பாளர் கமீலா நாசரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு பெண்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 8ந் தேதி உலக மகளிர் தினத்தன்று சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார் கமல். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் அதிக அளவில் பெண்களை பங்கேற்கச் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தக்கூட்டத்தில் பெண்களின் அடிப்படை உரிமைகள், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன, செயல்பாடுகள் என்ன என்பதை அறிவிக்க இருக்கிறார் கமல்.