பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா டீசர் நேற்று நள்ளிரவில் வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நள்ளிரவில் வெளியானதால் பலருக்கும் அந்த நேரத்தில் டீசர் வெளியானது தெரியவில்லை. தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
காலா டீசர் வெளியானால் அது மெர்சல் டீசரின் சாதனையை சில மணி நேரங்களிலேயே முறியடிக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 24 மணி நேரம் கடந்த பின்னும் மெர்சல் சாதனையை காலா டீசரால் முறியடிக்க முடியவில்லை. சில விஜய் ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே நான்-விஜய் சாதனை என காலா டீசரைப் பற்றி விமர்சித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை நான்-ரஜினி சாதனை என்றுதான் இருந்து வந்தது. ஆனால், மெர்சல் சாதனையை காலா டீசரால் முறியடிக்க முடியாததால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
24 மணி நேரத்திற்குள் காலா டீசருக்கு 87 லட்சம் பார்வைகளும், 3,29,000 லைக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால், மெர்சல் டீசர் அதே 24 மணி நேரத்தில் 1 கோடியே 12 லட்சம் பார்வைகளும், 7,28,000 லைக்குகளும் பெற்றது.
காலா டீசரை திட்டமிட்டபடி மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட்டிருந்தால் கண்டிப்பாக மெர்சல் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இணையத்தில் சிலர் திருட்டுத்தனமாக காலா டீசரை பதிவேற்றியதால் வேறு வழியில்லாமல் தனுஷ் நடு ராத்திரியில் காலா டீசரை வெளியிட்டதால் சாதனைகளைப் புரிய முடியவில்லை.
இணையத் திருடர்களுக்கு பயந்து வெளியிட்டதால் காலாவின் ரவுடித்தனம் டீசர் வடிவில் தோற்றுப் போய்விட்டது.